படி: 1

உங்களுக்கு பொருத்தமான ஒரு பேக்கேஜைத் தேர்ந்தெடுக்கவும்

படி: 2

மார்க்கிலிருந்து உரிமம் / உள்நுழைவுகளை வாங்கவும்.

படி: 3

உங்கள் உள்நுழைவு ஐடில் பிரத்தியேகமான அறிக்கைகளை பெறவும்
எங்கள் திட்ட விவரங்களைப் பற்றி விசாரிக்கவும்
விரிவான மதிப்பீடு


எங்கள் விஞ்ஞானரீதியில் உருவாக்கப்பட்ட தேர்வு, இந்திய சூழலை அடிப்படையாகக் கொண்டு துல்லியமான முடிவுகளையும் மாணவர் விவரங்களையும் உறுதி செய்யும்.

இந்தியாவுக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டது

எங்கள் தேர்வு உள்ளடக்கம் இந்திய மாணவர்களை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்டு வருகிறது மேலும் இது இந்திய மொழிகளில் கிடைக்கின்றது.

ஆலோசகர் அறிவிப்புப்பலகை


தொழில்சார் வாழ்க்கை (கெரியர்) பொருத்தங்கள், மாணவர் செயல்திறன் மற்றும் அறிக்கைகள் ஆகியவற்றுக்கான எளிதான அணுகல்.

எங்கிருந்து வேண்டுமானலும்/ எப்போது வேண்டுமானாலும் தேர்வில் கலந்துகொள்ளலாம்.

உங்கள் ஆலோசனை மையத்தில் அல்லது அதிக எண்ணிக்கையில் மாணவர்களை நீங்கள் அணுகக்கூடிய வேறு ஏதேனும் இடத்தில் தேர்வில் உங்கள் மாணவர்கள் கலந்துகொள்ளலாம்.மார்க்கிலிருந்து ஒரு உரிமத்தை / உள்நுழைவை பெறுவதற்கான செயல்முறை என்ன?

நீங்கள் "இப்போது பதிவு செய்யவும்" எனும் படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும். எங்களுடைய குழு உறுப்பினர்கள் உங்களுடைய தேவைகளைப் புரிந்துகொள்ளவும், எங்களுடனான கூட்டுறவுக்கான அடுத்த படிநிலைகளை விளக்கவும் உங்களுடன் தொடர்பில் இருப்பார்கள். பிறகு நாங்கள் உங்கள் தேவைகளுக்காக தேர்வை மாற்றியமைப்போம் மேலும் உங்களுக்கும் உங்கள் குழுவுக்கும் பிரத்தியேகமான உள்நுழைவு ஐடிகளை உருவாக்குவோம். உங்கள் தேவைக்கேற்ப உரிமம் / உள்நுழைவுகளை நீங்கள் பயன்படுத்தலாம்.
மார்க் தேர்வின் கால அளவு என்ன?

தேர்வை முடிக்க வழக்கமாக ஒரு மாணவருக்கு 2.5 மணி நேரம் ஆகும். மாணவர்/ஆலோசகர் வழக்கமாக அதே நாளில் மாணவருக்கு பொருந்தும் அறிக்கையை பெறுவார்.
மாணவர்கள் மற்றும் ஆலோசகர்கள் ஆகியோருக்கு தேர்வு அறிக்கை எப்போது கிடைக்கும்?
மாணவர் மற்றும் ஆலோசகர் ஆகியோர் மாணவர் தேர்வை முடித்த அன்றே பொருந்தும் அறிக்கையை பெறுவார்கள். தொழில்சார் வாழ்க்கைக்கான (கெரியர்) வழிகாட்டி அறிக்கை தேர்வு தேதியிலிருந்து 6 மாதங்கள் வரை மாணவர் மற்றும் பள்ளி ஆலோசகருக்கு கிடைக்கும். நீங்கள் உரிமத்தை வாங்கும் நேரத்தில் ஏதேனும் குறிப்பிட்ட தேவைகள் பற்றியும் எங்களுக்கு தெரியப்படுத்தலாம்.
இந்த தேர்வு எந்த வயதினருக்கு/வகுப்புகளுக்கு ஏற்றது?

மார்க் தேர்வு தற்போது 9 மற்றும் 10வது வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. 11 வது வகுப்பில் படிப்பிற்கான ஒரு பிரிவை தேர்தெடுக்கும்போது அவர்களுக்கு இருக்கும் பல்வேறு பரிந்துரைப்புகளை ஆராய்வதற்கான முக்கிய நேரம் இதுவாகும்.
மார்க் தொழில்சார் வாழ்க்கை (கெரியர்) மதிப்பீட்டு திட்டத்தைப் பெறுவதற்கான கட்டணங்கள் எவை?
ஆலோகரின் தேவைகளுக்கு ஏற்ப தொழில்சார் வாழ்க்கைக்கான (கெரியர்) வழிகாட்டுதல் தேர்வை நாங்கள் வடிவமைக்கின்றோம். எனவே நீங்கள் எதிர்நோக்கும் தயாரிப்பு அம்சங்களின் அடிப்படையில் கட்டணங்கள் மாறுபடும்.Explore career options through our blogs