மாணவர்களுக்காக

தேர்வுக்கான கால அளவு என்ன? நான் அதில் ஒரே சமயத்தில் பங்கேற்க வேண்டுமா அல்லது நான் வெவ்வேறு நாட்களில் பங்கேற்கலாமா?
இந்த தேர்வை முடிக்க மொத்தமாக சுமார் 2.5 மணி நேரம் ஆகும். ஒரே நாளில் தேர்வை முடிக்குமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இருப்பினும், நீங்கள் விரும்பும் எந்த நேரத்திலும் ஒவ்வொரு பிரிவிலும் தனித்தனியாக பங்கேற்கும் வாய்ப்பும் உள்ளது. நீங்கள் இடைவெளி விட்டும் வெவ்வேறு நாட்களில் ஒவ்வொரு பிரிவிலும் பங்கேற்கலாம். நீங்கள் ஒவ்வொரு பிரிவையும் சமர்ப்பித்த பிறகு, பதில்கள் சேமிக்கப்படும். இதனால் உங்களால் ஒரே பிரிவில் மீண்டும் பங்கேற்க முடியாது. இருந்தபோதிலும், உங்களின் முழு அறிக்கையைப் பெற, நீங்கள் ஒட்டுமொத்த தேர்வையும் முடிக்க வேண்டும்.
நான் தேர்வுக்காக எவ்வாறு பதிவு செய்வது மற்றும் பணம் செலுத்துவது?

டெபிட்/கிரெடிட் கார்டுகள்/ நெட் பேங்கிங் மூலம் மாணவர்கள் ஆன்லைனில் கட்டணத்தை செலுத்தலாம்.
தேர்வுக்கு வருவதற்கு முன்பு நான் தயாராக வேண்டுமா

தேர்வில் பங்குபெறுவதற்கு எந்தத் தயார்ப்படுத்தலும் தேவையும் இல்லை. இந்த தேர்வு உங்களுடைய தற்போதைய அறிவு நிலை, ஆர்வம், இயல்பான திறமைகள் மற்றும் ஆளுமை ஆகியவற்றை மதிப்பீடு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தேர்வின் ஒவ்வொரு பிரிவும் முக்கியமானதா அல்லது தேர்வின் சில பிரிவுகளை தவிர்க்க முடியுமா?
தேர்வின் அனைத்து பிரிவுகளிலும் பங்கேற்பது முக்கியமாகும். தேர்வை தீவிரமாக எடுத்துக் கொள்ளும் மாணவர்களுக்கு, அவர்களின் முடிவுகள் அதிக துல்லியமாகவும், அவர்களின் ஆர்வம்மற்றும்திறன்கள் ஒத்துப்போகும் வகையிலும் அமைந்திருக்கும்.பள்ளிகளுக்காக
/பள்ளிகள் வழக்கமாக எங்களிடம் எவற்றை கேட்கும்?

மார்க்கிலிருந்து ஒரு உரிமத்தை பெறுவதற்கான செயல்முறை என்ன?

நீங்கள் "இப்போது பதிவு செய்யவும்" எனும் படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும். எங்களுடைய குழு உறுப்பினர்கள் உங்களுடைய தேவைகளைப் புரிந்துகொண்டு, எங்களுடனான கூட்டுறவுக்கான அடுத்த படிநிலைகள் குறித்து விளக்கமளிப்பார்கள். உங்களுடைய பள்ளிக்கான தேர்வு உங்களுக்கு ஏற்ப மாற்றியமைக்கப்படும் மேலும் மாணவர்கள் மற்றும் பள்ளி நிர்வாகிகளுக்கான உள்நுழைவு ஐடிக்களை உருவாக்குவோம். உங்களுடைய தேவைக்கேற்ப உரிமத்தை பயன்படுத்தலாம்.
மார்க் தேர்வின் கால அளவு என்ன?

தேர்வை முடிக்க வழக்கமாக ஒரு மாணவருக்கு 2.5 மணி நேரம் ஆகும். மாணவர் வழக்கமாக அதே நாளில் அவருக்கு பொருந்தும் அறிக்கையை பெறுவார்.
மாணவர்கள் மற்றும் பள்ளி நிர்வாகிக்கு எப்போது தேர்வு அறிக்கை கிடைக்கும்?
மாணவர் மற்றும் பள்ளி அதிகாரிகள், மாணவர் தேர்வை முடித்த அன்றே அவருக்கு பொருந்தும் அறிக்கையை பெறுவார்கள். தொழில்சார் வாழ்க்கைக்கான (கெரியர்) வழிகாட்டி அறிக்கை தேர்வு தேதியிலிருந்து 6 மாதங்கள் வரை மாணவர் மற்றும் பள்ளி ஆலோசகருக்கு கிடைக்கும். நீங்கள் உரிமத்தை வாங்கும் நேரத்தில் ஏதேனும் குறிப்பிட்ட தேவைகள் பற்றியும் எங்களுக்கு தெரியப்படுத்தலாம்.
இந்த தேர்வு எந்த வகுப்புகளுக்கு ஏற்றது?

மார்க்தேர்வுதற்போது 9 மற்றும் 10வது வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. 11 வது வகுப்பில் படிப்பிற்கான ஒரு பிரிவை தேர்தெடுக்கும்போது அவர்களுக்கு இருக்கும் பல்வேறு பரிந்துரைப்புகளை ஆராய்வதற்கான முக்கிய நேரம் இதுவாகும்
மார்க் தொழில்சார் வாழ்க்கை (கெரியர்) மதிப்பீட்டு திட்டத்தைப் பெறுவதற்கான கட்டணங்கள் எவை?
பள்ளியின் தேவைகளுக்கு ஏற்ப தொழில்சார் வாழ்க்கைக்கான (கெரியர்) வழிகாட்டுதல் தேர்வை நாங்கள் வடிவமைக்கின்றோம். எனவே நீங்கள் எதிர்நோக்கும் தயாரிப்பு அம்சங்களின் அடிப்படையில் கட்டணங்கள் மாறுபடும்.பள்ளிகளுக்காக
வழக்கமாக ஆலோசகர்கள் எங்களிடம் என்ன கேட்பார்கள்?

மார்க்கிலிருந்து ஒரு உரிமத்தை / உள்நுழைவை பெறுவதற்கான செயல்முறை என்ன?

நீங்கள் "இப்போது பதிவு செய்யவும்" எனும் படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும். எங்களுடைய குழு உறுப்பினர்கள் உங்களுடைய தேவைகளைப் புரிந்துகொள்ளவும், எங்களுடனான கூட்டுறவுக்கான அடுத்த படிநிலைகளை விளக்கவும் உங்களுடன் தொடபில் இருப்பார்கள். பிறகு நாங்கள் உங்கள் தேவைகளுக்காக தேர்வை மாற்றியமைப்போம் மேலும் உங்களுக்கும் உங்கள் குழுவுக்கும் பிரத்தியேகமான உள்நுழைவு ஐடிகளை உருவாக்குவோம். உங்கள் தேவைக்கேற்ப உரிமம் / உள்நுழைவுகளை நீங்கள் பயன்படுத்தலாம்.
மார்க் தேர்வின் கால அளவு என்ன?

தேர்வை முடிக்க வழக்கமாக ஒரு மாணவருக்கு 2.5 மணி நேரம் ஆகும். மாணவர்/ஆலோசகர் வழக்கமாக அதே நாளில் மாணவருக்கு பொருந்தும் அறிக்கையை பெறுவார்.
மாணவர்கள் மற்றும் ஆலோசகர்கள் ஆகியோருக்கு தேர்வு அறிக்கை எப்போது கிடைக்கும்?
மாணவர் மற்றும் ஆலோசகர் ஆகியோர் மாணவர் தேர்வை முடித்த அன்றே பொருந்தும் அறிக்கையை பெறுவார்கள். தொழில்சார் வாழ்க்கைக்கான (கெரியர்) வழிகாட்டி அறிக்கை தேர்வு தேதியிலிருந்து 6 மாதங்கள் வரை மாணவர் மற்றும் பள்ளி ஆலோசகருக்கு கிடைக்கும். நீங்கள் உரிமத்தை வாங்கும் நேரத்தில் ஏதேனும் குறிப்பிட்ட தேவைகள் பற்றியும் எங்களுக்கு தெரியப்படுத்தலாம்.
இந்த தேர்வு எந்த வயதினருக்கு/வகுப்புகளுக்கு ஏற்றது?

மார்க் தேர்வு தற்போது 9 மற்றும் 10வது வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. 11 வது வகுப்பில் படிப்பிற்கான ஒரு பிரிவை தேர்தெடுக்கும்போது அவர்களுக்கு இருக்கும் பல்வேறு பரிந்துரைப்புகளை ஆராய்வதற்கான முக்கிய நேரம் இதுவாகும்.
மார்க் தொழில்சார் வாழ்க்கை (கெரியர்) மதிப்பீட்டு திட்டத்தைப் பெறுவதற்கான கட்டணங்கள் எவை?
ஆலோகரின் தேவைகளுக்கு ஏற்ப தொழில்சார் வாழ்க்கைக்கான (கெரியர்) வழிகாட்டுதல் தேர்வை நாங்கள் வடிவமைக்கின்றோம். எனவே நீங்கள் எதிர்நோக்கும் தயாரிப்பு அம்சங்களின் அடிப்படையில் கட்டணங்கள் மாறுபடும்.