நிபுணர் குழுசெல்வி. அனுராதா பிரபுதேஸாய்,
ஆலோசனை உளவியலாளர் & MBTI பயிற்சியாளர்


அனுராதா தொழில்சார் வழிகாட்டல் மற்றும் தொழில்சார் வாழ்க்கை (கெரியர்) ஆலோசனையிலும் நிபுணத்துவம் பெற்றவர் ஆவார். பல்வேறு படிப்புகள், கல்லூரிகள், மற்றும் தொழில்சார் வாழ்க்கை (கெரியர்) பரிந்துரைகள் பற்றிய ஒரு நடமாடும் கலைக்களஞ்சியமாகும். சற்றேகல்வியில்குறைபாடுள்ளமாணவர்களுக்கும்சிறப்புவழிகாட்டியாகவும்விளங்குகிறார்.செல்வி. ஷீதல் சீதா ரவி,
ஆலோசனை உளவியலாளர்


ஒரு உளவியலாளர் என்ற முறையில், ஷீதல் ஆளுமை மதிப்பீடுகள், உளச்சார் அளவிட்டு மதிப்பீடுகள், தனிநபர் ஆலோசனை மற்றும் சிகிச்சை ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றுள்ளார். அவருக்கு குழந்தை மற்றும் விடலைப்பருவத்தினருக்கான உளச்சார் உளவியில் சிகிச்சையில் கணிசமான அனுபவம் உண்டு. இவர் பக்திவேதாந்தா ஸ்வாமி மிஷன் பள்ளியில் தலைமை உளவியலாளராகவும் இருக்கிறார். கடந்த 18 ஆண்டுகளாக பள்ளியில் கல்வி மற்றும் ஆலோசனை உள்ளிட்டவைகளை தலைமையேற்று நிர்வகித்துள்ளார்.செல்வி சமிந்தரா சாவந்த்,
மருத்துவ உளவியல்


சமிந்தரா உளச்சார்-நோயறிதல் மற்றும் மருத்துவ மதிப்பீடுகளில் நிபுணத்துவம் பெற்றுள்ளார் மேலும் அவருக்கு குழந்தை, விடலைப்பருவத்தினர், திருமணம் மற்றும் குடும்ப உளச்சார் சிகிச்சையில் கணிசமான அனுபவம் உள்ளது. சமிந்தராவுக்கு கருத்தரங்குகள் மற்றும் பயிற்சிகளை நடத்துவதில் நீண்ட அனுபவம் உள்ளது. அவர் மாணவர்கள், பெற்றோர்கள், ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பலருடன் பணியாற்றியுள்ளார். திறமையை கண்டறிதல், மதிப்பீடு செய்தல் மற்றும் மேம்பாட்டு மையங்கள், செயல்திறன் மேலாண்மை, திறமை மேம்பாடு, உளச்சார் அளவீட்டு சோதனை போன்ற பலவற்றிலும் அனுபவம் பெற்றுள்ளார்.செல்வி ராதிகா குல்கர்னி,
ஆலோசனை உளவியலாளர்


ராதிகா ஆலோசனை உளவியலில் முதுநிலை பட்டம் பெற்றுள்ளார். இவர் உளச்சார் அளவீட்டு மதிப்பீடுகள், தொழில்சார் வாழ்க்கை (கெரியர்) வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை ஆகியவற்றில்தீவிர ஆர்வம்உள்ளவர். இந்தமுயற்சியில்தன்அர்ப்பணிப்புமற்றும்ஈடுபாட்டினால்வேகமாகவளர்ந்துவருகிறார்.

ஆலோசகர்கள்திரு. எஸ்.வி.ரங்கநாத் ஐஏஎஸ்,
வழிகாட்டி


திரு. எஸ்.வி.ரங்கநாத் கர்நாடக அரசின் முன்னாள் தலைமை செயலாளர் ஆவார். அவர் ஐஎஃப்சிஐ-ன் நிர்வாகம் சாராத தலைவர் ஆவார்.

திரு. ரங்கநாதன் ஐஏஎஸ் (கர்நாடகா-75) தொழில்நிலைப் பிரிவை சேர்ந்தவர். அவர் இந்திய அரசு மற்றும் கர்நாடகா அரசு ஆகிய இரண்டிலும் பல்வேறு பணிகளில் ஒரு குடிமையியல் ஊழியராக பணியாற்றியுள்ளார்.

இவர் இந்திய காபி வாரியத்தின் தலைவர், அபுதாபி இந்திய முதலீட்டு மையத்தின் உள்நிலை இயக்குநர், கர்நாடகா முதலமைச்சரின் முதன்மை செயலாளர், விண்வெளித்துறையின் கூடுதல் செயலாளர் மற்றும் நிதி ஆலோசகர் மற்றும் விண்வெளி ஆணையம், அணு சக்தி ஆணையம் மற்றும் புவி ஆணையம் ஆகியவ்ற்றின் உறுப்பினர் [நிதி] ஆகிய பதவிகளில் இருந்துள்ளார்.டாக்டர். கே ஆர் எஸ் மூர்த்தி,
வழிகாட்டி


டாக்டர் கே.ஆர்.எஸ். மூர்த்தி பெங்களூரில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட்டின் முன்னாள் இயக்குநர் ஆவார். அவர் சுமார்முப்பதுஆண்டுகளாகமேலாண்மை கல்வியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். இவர் மைசூர் பல்கலைக்கழகத்தில் தங்கப் பதக்கம் பெற்றவர் ஆவார்.

பேராசிரியர் மூர்த்தி மேலாண்மையில் கல்விகளை மேற்கொள்ளும் முன்பாக சுமார்பத்துஆண்டுகள்தொழிற்துறையில் வேலை செய்துள்ளார்.

மைசூர் பல்கலைக்கழகத்திலிருந்து புள்ளியியலில் முதுகலை பட்டம் பெற்ற பிறகு, இவர் ஸ்லோன் ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மென்ட், எம்.ஐ.டி.-யில் மேலாண்மை முதுகலை பட்டம் பெற்றார், மற்றும் அமெரிக்காவின் பாஸ்டனில் உள்ள ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூலில் வணிக நிர்வாகத்தில் டாக்டர் பட்டம் பெற்றார், அதன் பிறகு வணிகக் கொள்கை பேராசியராக இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மெண்ட் அகமதாபாத்தில் சேர்ந்தார். இவர் முதுகலை பட்டப் பிரிவில் பொது நிறுவன மேலாண்மையில் விருப்பப் பாடங்களை தொடங்கினார். இவர் ஐஐஎம்ஏ-ல் முதுகலை பட்டம், நிர்வாக வளர்ச்சி, முனைவர் மற்றும் துறைப் பணியாளர் வளர்ச்சி திட்டங்கள் ஆகியவற்றில் பேராசியராகஇருந்தார்.

இவர் ஆனந்தில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆஃப் ரூரல் மேனேஜ்மெண்டின் முதல் இயக்குநராகவும் இருந்துள்ளார்.பேராசிரியர் சமிர் குமார் பிரம்மச்சாரி,
வழிகாட்டி


பேராசிரியர் சமிர் பிரம்மச்சாரி இந்திய உயிர்-இயற்பியல் நிபுணர் மற்றும் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (CSIR)-ன் முன்னாள் தலைமை இயக்குநர் மற்றும் இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி (DSIR) துறையின் முன்னாள் செயலாளர் ஆவார். இவர் இந்தியாவில் நியூடெல்லியில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆஃப் ஜீனோமிக்ஸ் அண்ட் இண்டெக்ரேடிவ் பயாலஜி (IGIB)-ன் நிறுவனர் இயக்குநர் ஆவார். இவர் மருந்து கண்டுபிடிப்புக்கான திறந்த மூலம் (OSDD) திட்டத்தின் முதன்மை வழிகாட்டியாக இருக்கிறார். இவர் ஜே சி போஸ் பெல்லோஷிப் விருது, DST (2012)-ஐ பெற்றுள்ளார். இவர் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸில் உள்ள மூலக்கூறு உயிர்-இயற்பியல் பிரிவில் ஒரு இணை ஆராய்ச்சியாளராக தன் கல்வி தொழில்சார் வாழ்க்கையை (கெரியர்) தொடங்கினார், பிறகு பேராசியராக ஆனார். பிறகு அவர் CSIR - உயிர்வேதியல் தொழில்நுட்பத்திற்கான் மையம் (CBT)-ன் இயக்குநராக நியமிக்கப்பட்டார். CBT-ன் இயக்குநராக அவர் அதை CSIR-இன்ஸ்டிடியூட் ஆஃப் ஜீனோமிக்ஸ் அண்ட் இண்டெக்ரேடிவ் பயாலஜி ஆக மீண்டும் நிறுவப்பட்டதில் முக்கிய கருவியாக இருந்தார். இது மரபியல் மற்றும் தகவலியல் ஆகியவை சீராக ஒருங்கிணையும் ஒரு மையமாகும்.பேராசிரியர் அருண் நிகவேகர்,
வழிகாட்டி


பேராசிரியர் அருண் நிகவேகர், ஒரு பிரபலமான இயற்பியல் நிபுணர் ஆவார் மற்றும் புகழ்பெற்ற கல்வியாளராக 45 ஆண்டுகள் அனுபவத்தை பெற்றுள்ளார். உயர்கல்வியின் பயன்பாடு மற்றும் தரத்தை மேம்படுத்துவதற்கான தொழில்நுட்ப பயன்பாடு மற்றும் உயர்கல்வியின் சர்வதேசமயமாக்கம் ஆகியவற்றில் அவர் கணிசமான பங்களிப்புகளை செய்துள்ளா. அவற்றில் குறிப்பிடத்தக்க ஒன்று உயர்கல்வியில் தரம் எனும் கோட்பாட்டின் முன்னெடுப்பு ஆகும், இதற்காக அவர் முன்னாள் இந்திய ஜனாதிபதியான, மாண்புமிகு டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களால் இந்தியாவில் உயர்கல்வி தர இயக்கத்திற்கான தந்தை என பொருத்தமாக அழைக்கப்பட்டார்.

இவர் 2000 மற்றும் 2005 க்கு இடையில் UGC-ன் தலைவர்மற்றும் துணைத் தலைவராக இருந்துள்ளார். புனே பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்துள்ளார், இவரின் தலைமையின் கீழ் இப்பல்கலைக்கழகம் ஒரு சிறப்புவாய்ந்த பல்கலைக்கழகம் எனும் நிலையை அடைந்தது.

இவர் உயர்கல்வி கூட்டமைப்பு மற்றும் சூரிதத்தா இன்ஸ்டிடியூட்டின் வாழ்நாள் சாதனையாளர் விருதுகளை பெற்றார். யுனெஸ்கோவின் கௌரவ விருது, சுவாமி விவேகானந்தா விருது, ஷிரோமணி விருது மற்றும் டெல்லி ரத்தன் விருது போன்ற பல விருதுகளை வென்றுள்ளார்.

நிர்வாக குழுதிரு சுப்ரமண்யா பிஎன்,
தலைவர்


சுப்ரமண்யா பி.என். 30 ஆண்டுகளுக்கும் மேலான தொழில்முறை அனுபவமுள்ள ஒரு பட்டய கணக்காளர் ஆவார்.

இவர் பி.என்.சுப்ரமண்யா &கோ எனும் பட்டய கணக்காளர் நிறுவனத்தின் நிறுவனர் ஆவார். இந்நிறுவனம் மேலாண்மை ஆலோசனை, தணிக்கை மற்றும் வரி ஆலோசனை சேவைகளில் நிபுணத்துவம் பெற்றதாகும்.

இவர் கல்வி, சுகாதாரம், பொறியியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகியவற்றில் வணிக ஆர்வங்களை கொண்ட வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவதில் நல்ல அனுபவம் பெற்றுள்ளார். எம்.எஸ்.ராமைய்யா பயன்பாட்டு அறிவியல் பல்கலைக்கழகத்தின் நிர்வாகக் குழுவில் இருக்கிறார். இவர் முப்பது வருடங்களுக்கு மேலாக ஒரு ஆலோசகராக கோகுலா எஜுகேஷன் ஃபவுண்டேஷனில் செயல்பட்டு வருகிறார்.திரு முரளிதர் பொன்னலூரி,
தலைமை நிர்வாக அதிகாரி


ERA அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரி. முரளிதர் பொன்னலூரி (முரளி), மாற்றத்திற்கு தலைமை தாங்குதல், வளர்ச்சியை இயக்குதல் மற்றும் நிலைப்புத்தன்மையை உறுதிசெய்தல் ஆகியவற்றிற்கு பொறுப்பானவர் ஆவார்.

முரளி தயாரிப்பு மற்றும் சேவைகள் அமைப்புகளில் பல்வேறு குழுக்களுக்கு வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைகளை வழங்குவதில் நீண்ட தலைமைத்துவ அனுபவத்தை பெற்றுள்ளார். அவர் பணிகளை பெருக்க நினை நிறுவனங்களுக்காக வணிக திறன்களை ஏற்படுத்துதல், தகுதிகளை கட்டமைத்தல் மற்றும் சந்தை நிலைத்திட்டங்களை செயல்படுத்துதல் ஆகியவற்றில் நல்ல நிபுணத்துவத்தை பெற்றுள்ளார். வணிகம்வளாவும், திறமைவளர்க்கவும், தகுதிகளைக்கட்டமைக்கவும்ஆலோசனைஅளிப்பவர்.

முன்னதாக முரளி கிராமப்புற மற்றும் சமூக மருத்துவமனைகளுக்கான நாடுவாரியான பணிகளை அமைத்தல் மற்றும் தொழில்நுட்ப ஆதரவை பெருக்குதல் ஆகியற்றில் ஒரு முக்கிய பங்கு வகித்தார். அவர் க்ரைங்கெரில் நிலைத்திட்ட இயக்குநராகவும், ட்ரையான்ஸில் நிர்வாக இயக்குநராகவும், மேலும் ஹிந்துஸ்தான் டைம்ஸில் தலைமைப் பணி அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார்.

ERA ஃபவுண்டேஷனின் நோக்கம்- உயர்கல்வியில் தரத்தை மேம்படுத்துதல் மற்றும் இந்தியா முழுதுமுள்ள மாணவர்களுக்கு அவற்றுக்கான அணுகலையும் வாய்ப்பையும் உறுதிப்படுத்துதல் எனும் தன் தனிப்பட்ட நோக்கத்துடன் நன்கு ஒத்துப்போவதாக முரளி நம்புகிறார்.

முரளி ஒரு இயந்திரவியல் பொறியியலாளர் ஆவார் மேலும் அவர் புவனேஷ்வரில் உள்ல சேவியர் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்டில் வணிக நிர்வாகத்தில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார்.